எந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகம் தெரியுமா?
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து CMIEஎன்ற அமைப்பு அண்மையில் பட்டியலை வெளியிட்டது. இதன்படி இந்தியாவிலேயே ஹரியானாவில்தான் அதிகபட்சமாக 30.6% மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 24.5%ஆகவும் வேலைவாய்ப்பு இல்லாத விகிதம் உள்ளது இந்த தரவுகள் அனைத்தும் நவம்பர் மாதத்தில் மட்டும் வெளியிடப்பட்டவை,CMIE அமைப்பின் தரவுகளின்படி 3-ம் இடத்தில் ஜம்மு-காஷ்மீர், பீகார் 4ம் இடத்தில் உள்ளன ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு 23.9%ஆகவும்,பீகாரில் 17.3% பேரும், திரிபுராவில் 14.5% பேருக்கும் வேலை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
மிகக்குறைந்த வேலைவாய்ப்பு அற்றவர்கள் கொண்ட பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள பூஜ்ஜியம் புள்ளி 1 % மக்கள் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாகவும்,1.2% உடன் உத்தராகண்ட் இரண்டாம் இடமும்,ஒடிசாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு வெறும் 1.6%ஆக உள்ளது.இதேபோல் கர்நாடகத்தில் வேலைவாய்ப்பு அற்றவர்களின் அளவு 1.8%ஆக உள்ளது. இதேபோல மேகாலயாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு 2.1%ஆக உள்ளது.