முதலீட்டாளர்களுக்கு 3.49லட்சம் கோடி ரூபாய் லாபம்..
இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்ந்து, 79,802 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 131 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 3.49லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. Bharti Airtel, Cipla, Sun Pharma, M&M,Adani Ports உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. Power Grid Corp, Shriram Finance, Hero MotoCorp, Nestle,Apollo Hospitals. உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. பொதுத்துறை வங்கிகள், மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஆட்டோபொல் துறை, மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு ஏற்றம் கண்டன. Avalon Technologies, Computer Age Management Services, Capacite Infra, Caplin Labs, Hikal, KFin Technologies, Kirloskar Pneumatic, Laurus Labs, Lloyds Metals, Mangalore Chemicals, Marksans Pharma, Paytm, Orchid Pharma, PG Electroplast, Pitti Engineering, Praj Industries, Sterling Tools, Wockhardt,உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7160 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.