FMCG நிறுவனங்கள் நம்பிக்கை..

2024-ல் கடும் சரிவுகளை சந்தித்த இந்திய எப்எம்சிஜி நிறுவனங்கள், அடுத்தாண்டாவது லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு குறைந்து அடுத்தாண்டு இரண்டாவது பாதியில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உணவு விலைவாசி உயர்வு தான் எப்எம்சிஜி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் வரும் நாட்களில் விலைவாசி குறையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொது மற்றும் தனியார் நிறுனங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும், உள்கட்டமைப்புகள் வலுவடைந்துள்ளதாலும் அடுத்த ஓரிரு காலாண்டில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த அக்டோபரில் சில்லறை பணவீக்க குறீயீடு 6.21 விழுக்காடாக இருந்தது. செப்டம்பரில் இது 5.02விழுக்காடாக சரிந்தது. நகர்புற வரவேற்பு மிகவும் குறைந்துள்ள நிலையில், கிராமபுற வரவேற்பு அதிகரித்துள்ளன. துரித வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகம் இறுப்பதால் வணிகம் இயல்புநிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்களை விட கிராமங்களில் வீட்டு உபயோக பொருட்களை மக்கள் அதிகம் வாங்குவதால் பெரிய வளர்ச்சி இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கொக்ககோலாவின் புதிய தயாரிப்பான கோக் பட்டி என்ற தயாரிப்பு கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.