மீண்டும் கிடுகிடு உயர்வில் தங்கம் விலை..
கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிவேகத்தில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக உலகளாவிய பதற்றம் தான் காரணம் என்றும் இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் , தனது வட்டி விகிதத்தை குறைக்கப்போவதாக வெளியான தகவலால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சர்வதேச அளவில் தங்கம் விலை 0.7%விலையுயர்ந்து 2 ஆயிரத்து 691 டாலர்களாக இருந்தது. சர்வதேச அளவில் நிலவும் சூழலை அடிப்படையாக கொண்டு இந்திய சந்தையிலும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒரே வாரத்தில் தங்கம் விலை கடுமையாக அதாவது 5 விழுக்காடு வரை உயர்ந்தது இதுவே முதல் முறை. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது..குறிப்பாக நிப்ரோ பகுதியில் ரஷ்யா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வைத்து தாக்குதல் நடத்தியதும், உக்ரைன் நாடு தங்கள் ஆயுதங்களை பயன்படுத்த பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளதும் பிரச்சனையை தீவிரமடைய வைத்திருக்கிறது. அமெரிக்க பொருளாதார தரவுகளான ஜிடிபி பிசிஇ உள்ளிட்ட தரவுகள் வரும் வாரத்தில் வெளியாக இருக்கின்றன. இதனால் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,715 அமெரிக்க டாலர் வரை கூட உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகித மாற்றம்தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.. தங்க ஈடிஎப் மற்றும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது ரிஸ்கை குறைக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்