பெரிய சரிவில் முடிந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை கடும் சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து, 79, 043 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி360 புள்ளிகள் சரிந்து 23ஆயிரத்து 914 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. Adani Enterprises, Shriram Finance, SBI, Ciplaஉள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. SBI Life Insurance, HDFC Life, Infosys, M&M, Bajaj Finance உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ஆட்டோமொபைல், வங்கி, தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து உள்ளிட்ட துறை பங்குகள் 0.3 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரை சரிந்தன. பொதுத்துறை வங்கிகள், மற்றும் ஊடகத்துறை பங்குகள் ஏற்றம் கண்டன. KEC International, EID Parry, Laurus Labs, Paytm, Caplin Labs, eClerx Services, HDFC Bankஉள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத்தங்கம் விலை வியாழக்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7090 ரூபாயாகவும், ஒரு சவரன் 56, 720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 98 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ98 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.