ரேஞ்ச் ரோவர் அப்டேட்..
பிரபல பிட்டன் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது இந்தியாவின் டாடாவிடம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் என்ற காரை இந்தியாவிலேயே விற்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது. ரேஞ்ச் ரோவர் வண்டிகள் இனி முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். புனேவில் உள்ள ரேஞ்ச் ரோவர் கார் ஆலையில் இந்த வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில் இந்த வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்திய மதிப்பில் இந்த வகை கார்கள் 1.40 கோடி ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள்ளேயே தயாரிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரக கார்களின் மூலம் ரேஞ்ச் ரோவர் வகையில் 6 கார்களை டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் உற்பத்தி செய்வதாக , அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன் அம்பா தெரிவித்துள்ளார்.