மாஸ்டர்கார்டு (Debit & Credit) சேவை மீதான தடை நீக்கம் – RBI

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வியாழன் அன்று டெபிட் மற்றும் கிரெடிட் மாஸ்டர்கார்டு சேவை மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது
வாடிக்கையாளரின் தரவுகளை சேமிப்பதில் RBI சுற்றறிக்கையுடன் Mastercard திருப்திகரமான இணக்கத்தை நிரூபித்ததைக் கருத்தில் கொண்டு, புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டைனர்ஸ் கிளப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை டைனர்ஸ் கிளப் நிறுவனத்திற்கு நீக்கப்பட்ட நிலையில், தற்போது மாஸ்டர் கார்ட் நிறுவனத்திற்கும் நீக்கப்பட்டுள்ளது.
2018ம் அண்டு வெளியாக விதிகளில், இந்தியாவில் இருந்து செய்யப்படும் பரிவத்தனைகள் குறித்த தகவல்கள் இந்தியாவிலேயே சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறித்தது. இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாஸ்டர் கார்ட் நிறுவனம் இதற்கு தகுதி பெறவில்லை என்ற காரணத்தால், இந்தியாவில் மாஸ்டர் கார்ட் நிறுவனம் புதிதாக கார்ட்களை வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது விதிகளுக்கு உட்பட்டு அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளதாக மாஸ்டர் கார்ட் அறிவித்துள்ள நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, இந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 Comments
2brewery
2redoubtable