அனில் அம்பானி உள்ளிட்ட 25 பேருக்கு 5 ஆண்டுகள் தடை..
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் 24 பேர் பங்குகளை பிரிக்கும் பணிகளை செய்யக்கூடாது என்று செபி ஆணையிட்டுள்ளது. அனில் அம்பானி தற்போது நிர்வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் குறித்த நடவடிக்கைகளில் 5 ஆண்டுகள் ஈடுபடக்கூடாது என்றும் 25 கோடி ரூபாய் அபராதத்தையும் செலுத்தவும் செபி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானி மட்டுமின்றி ரிலையன்ஸின் வீட்டுக்கடன் நிறுவனத்தை 6 மாதங்களுக்கு முடக்கிஅதற்கு 6 லட்சம் ரூபாய் அபராதத்தையும் செபி விதித்துள்ள்ளது. முறைகேடாக பணம் பெற்று அதை கடன் போல கணக்கு காட்டியதாக அனில் அம்பானியின் மீது செபி 222 பக்க அறிக்கையை வெளியிட்டது. நிர்வாக முறைகேடுகள் நடந்திருப்பதையும் செபி அமைப்பு தெரிவித்துள்ளது. முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில் ஏராளமானோர் வாங்கி கடன்களை திரும்பத் தரவில்லை..இதனால் ரிலையன்ஸ் வீட்டுக்கடன் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது.
2018-ல் 59 ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது வெறும் 75 பைசாவாக குறைந்துள்ளது. இதனால் 9 லட்சம் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர், பிங்கேஷ் ஷா ஆகிய 24 பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார்கள் உறுதியான நிலையில் முகேஷ் அம்பானிக்கு 25 கோடி ரூபாயும், பாப்னாவுக்கு 27 கோடி, சுதால்கருக்கு 26 கோடி ரூபாயும் செபி அபராதமாக விதித்துள்ளது. Reliance Unicorn Enterprises, Reliance Exchange next Lt, Reliance Commercial Finance Ltd, Reliance Cleangen Ltd, Reliance Business Broadcast News Holdings Ltd and Reliance Big Entertainment Private Ltd உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தலா 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது செபி மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் தற்போது 25 பேருக்கு தடை விதித்து செபி அதிரடி காட்டியுள்ளது.