டாடா சன்சில் – ஐபிஓ திட்டம் கைவிடப்படுகிறதா?
ஆரம்பப் பங்கு வெளியிடும் திட்டத்தை டாடா சன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பி குரூப் என்ற நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர். இந்த நிறுவனம் அண்மையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ள நிலையில் டாடா சன்ஸ் ஐபிஓ திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதாவது வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற பதிவை ரத்து செய்ய ரிசர்வ் வங்கியிடம் முறையிடப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் எஸ்பி குரூப் நிறுவனத்துக்கு 18.5% பங்குகள் உள்ளன. ஐபிஓ வெளியிட்டால் தங்கள் கடனும் குறையும் என்று டாடா குழுமத்திடம் எஸ்பி குரூப் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆணையின்படி, வங்கியல்லாத நிதிநிறுவனங்களில் உயர் அடுக்கில் உள்ள நிறுவனங்கள் அடுத்தாண்டு செப்டம்பருக்குள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவேண்டும். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனம் தாம் வாங்கியிருந்த 21,813 கோடி ரூபாய் கடனையும் முழுமையாக அடைத்துவிட்டது. டாடா சன்ஸ் நிறுவன ஆண்டு அறிக்கையின்படி டாடாசன்ஸ் நிறுவன வளர்ச்சி 25% உள்ளதாகவும், மொத்த வருவாய் 43,893 கோடி ரூபாயாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கடன் முற்றிலுமாக குறைந்து 2679 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரிகள் செலுத்தியது போக அந்நிறுவனத்துக்கு லாபம் மட்டுமே 34,653 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டை விட 57%அதிகமாகும். கோர் இன்வஸ்ட்மன்ட் கம்பெனி எனப்படும் சிஐசி சான்றையும் ரத்து செய்யக் கோரி டாடா நிறுவனம் ரிச்ர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் விரைவில் பதில் அளிக்க உள்ளது.