100 டன் தங்கம் இறக்குமதி ஏன்?

இந்தியாவுக்கு 100 டன் தங்கத்தை இறக்குமதி செய்யும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சக்தி காந்ததாஸ், இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரம் இந்தியாவிலேயே தங்கத்தை சேமித்து வைக்கும் வசதி வந்துவிட்டதாகவு் அவர் கூறியுள்ளார். இந்தியா தொடர்ந்து தங்கத்தை அதிகளவில் வாங்கி வைத்துள்ளதாகவும், தங்க கையிருப்பை உறுதி செய்வதற்காகவே தங்கத்தை அதிகளவில் வாங்குவதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரங்கராஜன் குழு பரிந்துரையின்படி 25 விழுக்காடு தங்கத்தை வெளிநாட்டில் வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சக்தி காந்ததாஸ், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு முடிவு செய்யவில்லை என்றும் உயர் மட்ட குழுதான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுப்பதுடன் நிர்வகித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
ரிசர்வ் வங்கியன் சமீபத்திய தகவலின்படி 822.1 டன் தங்கம் இந்தியாவிடம் உள்ளது. இதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் இந்திய ரிசர்வ் வங்கி சேமித்து வைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 27.5 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது. அண்மையில் தனி விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் இந்த தங்கம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நம்நாட்டுக்கு சொந்தமான தங்கம் மும்பையின் மிண்ட் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் சேமிப்பு கிடங்கிலும், நாக்பூரிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.