சிட்டி குழுமம் 10%பணியாளர்களை நீக்க முடிவு..

சிட்டி குழுமம் உலகளவில் பிரபலமான நிதி மற்றும் வங்கித்துறை சார்ந்த பணிகளையும், சேவைகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் நடந்த சிட்டி குழுமக் கூட்டத்தில் 10%பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் வேலை நீக்கம் தொடர்பாக பணியாளர்களை சிட்டி குழுமம் எச்சரித்திருந்தது.எனினும் எத்தனைவிழுக்காடு ஆட்குறைப்பு என்ற தகவலை வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த ஆட்குறைப்புக்கு project bora bora என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.சிக்கன நடவடிக்கைகளை எடுப்பது எப்படி? பங்குச்சந்தையில் சிட்டி குழுமத்தின் மதிப்பை உயர்த்துவது எப்படி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 10%பணியாளர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை மாறலாம் என்றும் தெரிகிறது. 10விழுக்காடு பணியாளர்கள் நீக்கம் மட்டுமின்றி, மேலாளர்கள்,வட்டார மேலாளர்கள் உள்ளிட்ட தேவையில்லாத பணிகளையும் வெட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனத்தை சிட்டி குழுமம் அனுகியுள்ளது. 13 அடுக்குகளை கொண்ட மேலாளர்களின் பிரிவை 8 ஆக குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.இதில் முதல் இரண்டு நிலைகளில் மட்டுமே 15%பணியாளர்கள் இருக்கின்றனர். தற்போது வரை வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு பிரேசர் என்பவர் தலைமைப்பொறுப்பை ஏற்றதில் இருந்து எப்படி வருவாயை அதிகரிப்பது என்பதிலேயே குறியாக இருக்கிறார்.இதனால் பலருக்கு வேலை போகும் என்றும் முதலில் கணிக்கப்பட்டது. இதுதான் தற்போது படிப்படியாக நடைபெற்று வருகிறது.