மீண்டும் தழைக்கும் நம்பிக்கை..

உலகளவில் கடந்த 20 மாதங்களில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் ஆட்களை புதிதாக தேர்வு செய்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் 82 ஆயிரம் பேர் புதிதாக டெக் நிறுவனங்களில் வேலையில் சேர்ந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 50 ஆயிரமாக இருந்தது. புதிதாத நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் விகிதம் 4 முதல் 6 விழுக்காடாக இருக்கிறது. இது மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் நிலவரமாகும். விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் சேர்ந்து புதிய தரவுகள் எடுக்கப்பட்டன. கடந்த 8 காலாண்டுகளாக புதிதாக ஆட்களை தேர்வு செய்ய முடியாமல் திணறிய நிறுவனங்கள் தற்போது மெல்ல மெல்ல ஆட்களை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். புதிதாக எடுக்கும் ஆட்களின் எண்ணிக்கையைவிட ஏற்கனவே இருந்த பணியாளர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவே டெக் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. ஆட்களை எடுத்துவிட்டு அவர்களுக்கு வேலை தராமல் பெஞ்சில் வைப்பதை குறைத்துவிட்டு, அதிக ஆட்டோமேஷன், திறமையான பணியாளர்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப மட்டும் ஆட்களை எடுப்பதில் ரெக்ரூட்மண்ட் நிறுவனங்கள் தெளிவாக இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு, ஜெனரேட்டிவ் ஏ.ஐ உள்ளிட்ட இடங்களில் அதிகம் பேரை கவனமாக நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அதிகம் பேரை எடுக்காமல் கவனமாகவே ஆட்களை புதிதாக நிறுவனங்களில் சேர்க்கும் போக்கு அடுத்த 2 காலாண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உலகளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற சூழல் காரணமாக புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை வெளிநாட்டினர் விரும்பவில்லை என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது. தற்போது கிளைவுடு ஆர்கிடெக்ட், Azure,ஃபுல் ஸ்டாக் பொறியாளர்களுக்குத் தான் அதிக தேவை இருக்கிறது. மிகத் திறமையான பணியாளர்களை புதிதாக சேர்ப்பது குறைந்துள்ளது. அதே நேரம் செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த திறமை உள்ளவர்களுக்கு தேவை இருக்கிறது.