செபி எச்சரிக்கை..

பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய பட்டியல் இடப்படாத நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செபி ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், மேலே சொன்னபடி செயல்களில் ஈடுபடுவது செபியின் விதிக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் சில நிறுவனங்கள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டே இதே பாணியில் சுற்றறிக்கையையும் செபி வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் சில திட்டங்களில் கவனமுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட தரவுகள், சொந்த தகவல்களை முதலீட்டாளர்கள் அளிக்கக்க கூடாது என்றும் அவ்வாறு அளிக்கும்போது அதற்கு முதலீட்டாளரே சொந்த ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத ஆலோசகர்கள், சந்தைஆய்வாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ,நம்பகமான பங்குசந்தையில் மட்டுமே நிதி திரட்டும் முயற்சி செய்யலாம் என்றும், அதில்பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும் செபி கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு செபியின் இணையதளமான www.sebi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும் செபி அறிவுறுத்தியுள்ளது.