அடுத்தடுத்து ஹோட்டல்களை திறக்கும் ஐடிசி..

ஃபார்டியூன் ஹோட்டல்களுடன் ஐடிசி நிறுவனம் 14 வணிக ஒப்பந்தங்கள் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 7 புதிய சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள், இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் திறக்கப்பட்டுள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடுத்தர வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு மற்றும் 3 ஆம் தர நகரங்களை அந்த நிறுவனம் குறிவைத்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடனான காலகட்டத்தில் ஃபார்டியூன் நிறுவனத்தின் கீழ் 78 ஹோட்டல்கள் இருந்தன. அதில் 56 ஹோட்டல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்தகட்டமாக 22 ஹோட்டல்கள் நேபாளத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எளிதாக சுற்றிப்பார்த்துவிட்டு தங்கும் வகையில் இந்த நிதியாண்டும் பணிகளை செய்வதாக ஐடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. 2025 நிதியாண்டில் மட்டும் சென்னை, புரி, பஹல்காம் உள்ளிட்ட 6 ஹோட்டல்களையும், நேபாளத்தின் பக்த பூரில் ஒரு ஹோட்டலும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சென்னை, கோவா, கொல்கத்தா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் புதிய ஹோட்டல்களை திறக்கவும் ஐடிசி நிறுவனம் தனது திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் நேபாளில் 65 நகரங்களில் ஃபார்டியூன் ஹோட்டல்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.