கடந்த காலாண்டில் பிரகாசித்த பங்குகள் எவை..

முன்னணி நிறுவனங்களான சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட 8 நிறுவன பங்குகளை பங்குதாரர்கள் மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் அதிகம் விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 14 பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் பரஸ்பர நிதியில் பங்குதாரர்கள் அவர்களின் பங்குகளை அதிகரித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு, உலகளாவிய சூழல் குறித்து முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் உள்ளூர் முதலீட்டாளர்கள் தெளிவாக இருக்கின்றனர். நியூஏஜ் பங்குகளில் 9 பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுத்தாலும், 5-ல் அதிகம் முதலீடுகளை செய்துள்ளனர். பாலிசிபசார், டெலிவரி ஆகிய நிறுவனங்களில் முதலீடுகள் குறைந்துள்ளன. எடர்னல், பிரைன்பீஸ் சொல்யூசன்ஸ், ஸ்விக்கி, பேடிஎம், உள்ளிட்ட நிறுவன பங்குகளில், எடர்னல் நிறுவன பங்குகள் 2.95 விழுக்காடு உயர்ந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களில் கார் டிரேட் டெக் நிறுவன பங்குகள் 4ஆவது காலாண்டில் 60.96 விழுக்காடாக உயர்ந்துள்ளன. குறிப்பிட்ட நிறுவனம், 132விழுக்காடு ரிட்டர்ன்ஸ் அளிக்கின்றன. எடர்னல், நைகா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபகரமாக மாறின. பேடிஎம் நிறுவனம் ரிவர்சல் வகைக்கு சென்றுள்ளது. எடர்னல் மற்றும் ஸ்விகி நிறுவன பங்குகள் மிதமான வகையில், வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லிவெரி நிறுவனபங்குகள் மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வருகிறது. வால்மோ மற்றும் தரக்கட்டுப்பாடு காரணமாக அந்நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.