மின்சார பஸ்களை தயாரிக்கும் மஹிந்திரா நிறுவனம்…

எஸ்எம்எல் இசுசூ நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை வாங்கியுள்ள மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், இலகு ரக பேருந்துகள் பிரிவில் 21 விழுக்காடு பங்குகளை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. 555 கோடி ரூபாய் மதிப்புக்கு இசுசூ நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை மஹிந்திரா வாங்கியிருந்தது. எஸ்எம்எல் இசுசூ நிறுவனம் இலகு ரக பேருந்துகள் மற்றும் சிஎன்ஜி பிரிவு வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், அதனால் மஹிந்திராவும் பலன்பெறும் என்று மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிக்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நகரங்களை இணைக்கும் வகையிலும், நகரக்குள்ளேயே ஓட்டும் வகையில் ஹிரோய்.இவி என்ற பேருந்தையும் இசுசூ தயாரித்து வருகிறது. மத்திய அரசு 14,028 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. 10ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு பிரதமரின் மின்சார புரட்சி முன்னெடுப்பில் நிதியும் ஒதுக்கப்படும் சூழலில், இசுசூவின் பங்குகளை மஹிந்திரா வாங்கியுள்ளது.
220 டீலர்கள், 400 சேவை மையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 3.5 டன்னுக்கும் அதிக எடையுள்ள வாகனங்கள் உற்பத்தியில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் குறைவான பங்களிப்பே அளிக்கின்றன. எஸ்எம்எல் இசுசூ நிறுவனத்தால் ஒரு ஆண்டில் 35,000பேருந்துகள் வரை தயாரிக்க முடியும், இதற்காக பிரத்யேகமாக தனிப்பட்ட நிதி எதுவும் தேவைப்படாது. இசுசூவின் பங்குகளை வாங்கியுள்ள மஹிந்திரா, கூட்டு நிறுவனமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை. சேவை நெட்வொர்க் மற்றும் பிளாட்ஃபார்ம் பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மஹிந்திரா நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.