எக்சைடு நிறுவன லாபம் சரிவு…

இந்தியாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக எக்ஸைடு உள்ளது. இந்த நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிகர லாபம் என்பது 10 விழுக்காடு விலை குறைந்து 254 கோடியே 60லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், மூலப்பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் இருந்ததால் லாபம் சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு கடைசி காலாண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 283கோடியே 75 வட்சம் ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் வருவாய் 3.4 விழுக்காடு உயர்ந்து 4,159கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் முக்கிய மூலப்பொருளான ஆண்டிமனி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், மொத்த செலவு 5.55விழுக்காடு உயர்ந்து 3,832 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டுமொத்த விற்பனை குறைந்த அளவிலேயே உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் சிஇஓ ஆவிக் ராய் தெரிவித்துள்ளார். உலகளவில் தங்கள் நிறுவன தயாரிப்புகளை அதிகளவில் வேறு நாடுகளுக்கு எடுத்துச்செல்ல முற்படுவதாகவும் ராய் தெரிவித்தார். உலகளவில் ஆட்டோமொபைலுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.