லாபத்தை குவித்த மஹிந்திரா அன்ட் மஹிந்திரா..

கடந்த மார்ச்சுடன் முடந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகளை மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், எஸ்யூவி கார்களின் வளர்ச்சி 18 விழுக்காடாக இருந்ததாகவும், டிராக்டர் தயாரிக்கும் பிரிவு 23 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரிகள் பிடித்தது போக அந்த நிறுவனம் 3,295 கோடி ரூபாயாக லாபத்தை பதிவு செய்தது. கடந்த நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் வருவாய் 14 விழுக்காடு உயர்ந்து 1.59லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2030 ஆம் ஆண்டில் புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதிய பிளாட்ஃபார்மையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட இருக்கிறது. மின்சார கார் தயாரிக்க மட்டும் அந்நிறுவனம் 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனமும் அட்டகாசமான வசூலை குவிக்கிறது. விவசாயத்துறையில் மட்டும் கடந்த காலாண்டில் வருவாய் 17 விழக்காடு உயர்ந்து 7,933 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரி பிடித்தது போக மீத பணம் 758 கோடி ரூபாயாக உள்ளது. சேவைத்துறையிலும் 9,914 கோடி ரூபாய் வருவாயை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.மஹிந்திரா லைப்ஸ்பேசஸ், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் முறையே 1,055 மற்றும் 1570 கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாய் உயர்ந்துள்ளது.