முறைகேடு புகாரில் அதிரடி காட்டிய செபி..

முறைகேடு புகார்களை அடுத்து சினாப்டிக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அதன் புரமோட்டர்களுக்கு பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஃபர்ஸ்ட் ஓவர்சீஸ் கேபிடல் நிறுவனம் புதிதாக எந்த அசைன்மென்ட்டையும் ஏற்கக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜதின் ஷா, ஜக்மோகன்மணிலால் ஷா உள்ளிட்டோரின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ள செபி, அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த செயல்பாடுகளும் செய்யக்கூடாது என காட்டமாக கூறியுள்ளது. focl நிறுவனம் ஐபிஓ மூலம் பணம் பெற்றுவிட்டு,அதனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அதிரடி ஆணையிட்டுள்ளது. தற்போது நிலுவையில் இருக்கும் பணிகளுக்கு நிதி தேவைப்பட்டால் ஒரு கண்காணிப்பு குழுவோ முகமையோ அமைத்து பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கிக்கு அளித்த பணத்தை பார்த்து மிரண்டுபோனதாகவும் அதிர்ச்சியளித்ததாகவும் செபி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது மட்டுமின்றி ஐபிஓ மூலம் பணம் பெற்று அதனை முறையாக பயன்படுத்தாத 20 நிறுவனங்களின் நிதி பயன்பாடு குறித்தும் செபி தனது ஆய்வை தொடங்கியுள்ளது.