எஸ்பேங் பங்குகளை வாங்கிய ஜப்பானிய நிறுவனம்..

ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்சூய் வங்கி கார்பரேஷன் நிறுவனம், எஸ்பேங்கின் 20 விழுக்காடு பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
13 ஆயிரத்து 483 கோடி ரூபாய்க்கு இந்த டீல் முடிய இருக்கிறது. ஒரு பங்கின் விலை 21 ரூபாய் 50 பைசாவாக உள்ளது. திவாலான எஸ்பேங்கின் பங்குகளில் பாரத ஸ்டேட் வங்கி13.19 விழுக்காடு பங்குகளை விற்க இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 8889 கோடி ரூபாயாக இருக்கிறது. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, 7 தனியார் வங்கிகளிடம் எஸ் பேங்க் நிறுவன பங்குகள் 4,594 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளன. எஸ்பேங் மற்றும் எஸ்பிஐ நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஜப்பான் நிறுவனத்துக்கு பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திவால் நிலையில் இருந்த எஸ்வங்கியை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் 7 தனியார் வங்கிகள் கடந்த மார்ச் 2020-ல் வாங்கிவிட்டன. தற்போது ஜப்பானிய வங்கி நிறுவனம் எஸ்வங்கியின் பங்குகளை வாங்கியுள்ளதுடன், 2 புதிய இயக்குநர்களையும் அந்த வங்கி நியமிக்க இருக்கிறது. ஜப்பானிய நிறுவனம் தங்கள் வங்கியின் பங்குகளை வாங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக எஸ் பேங் சிஇஓ பிரஷாந்த் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானிய நிறுவனம் இந்தியாவின் ஒரு வங்கியின் பங்கை வாங்குவதால் பெரிய தொகை கைமாற இருக்கிறது. இதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய போட்டி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் அவசியமாகிறது. எஸ் வங்கியின் பங்குகளை வாங்கும் ஜப்பானிய வங்கி நிறுவனம், ஜப்பானின் இரண்டாவது பெரிய வங்கியாகும். அதன் சொத்து மதிப்பு மட்டும்ல டிசம்பர் 2024 கணக்கின்படி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.