அதானி குழுமத்தின் அடுத்த திட்டம் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் மற்றும் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதற்காக கௌதம் அதானி, ஏலங்களை மதிப்பீடு செய்து வருவதாக பெயர் குறிப்பிடாத இருவர் தெரிவித்தனர்.
மெட்ரோபோலிஸின் மார்க்கெட் கேப் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் செயல்பாடுகளின் அடிப்படையில், ஒப்பந்த அளவு குறைந்தது $1 பில்லியன் ( ₹7,765 கோடி) இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த மாதம், அதானி குழுமம் ஹெல்த்கேர் துறையில் ஒரு பெரிய முயற்சியைத் திட்டமிட்டு வருவதாகவும், பெரிய மருத்துவமனைகள், டயாக்னாட்டில் செயின்ஸ், ஆஃப்லைன் மற்றும் டிஜிட்டல் மருந்தகங்களை வாங்கலாம் என்றும் தகவல்கள் கூறியிருந்தன.
இந்த வணிகத்திற்காக 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும், சுகாதாரப் பாதுகாப்பு துறையில் காலடி எடுத்து வைப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களிடம் நீண்ட கால நிதித் திட்டத்தை வகுக்கப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் ஆண்டு வருமானம் $20 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இது மின்சாரம், பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பிற தொழில்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.