இலக்குகளை கடந்த ஆப்பிள் நிறுவனம்..

அமெரிக்காவில் உபயோகிக்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். ஐபேட், மற்றும் பிற பொருட்கள் வியட்நாமில் இருந்து தயாரானவை என்றும் கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 3 மாதங்களின் வருவாய் என்பது அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்ததைவிடவும் அதிகளவில் இருப்பதாக தெரிகிறது. அதாவது முதல் மூன்று மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 24.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 23.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் என்பது 5.1 விழுக்காடு உயர்ந்து 95.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் ஐபோன்கள் விலை மாறுபட வாய்ப்புள்ளது. எனினும் முதல் 3 மாதங்களில் அமெரிக்காவில் ஐபோன்களுக்கு மவுசு குறையவே இல்லை. செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்கு ஆப்பிள் நிறுவனம் கடைசியாகத்தான் நுழைந்ததால் சந்தையில் இன்னும் பெரிய இடத்தை எட்டவில்லை. அதே நேரம் சீனாவில் ஐபோன்களின் விற்பனை 2,3விழுக்காடு குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, இந்தியாவிற்குஐபோன் ஆலைகளை அமெரிக்கா மாற்றி வருகிறது.