வீடு வாங்க போறீங்களா இத படிங்க..

டெக் நகரமான பெங்களூருவில், முதல் முறை வீடு வாங்குவோருக்கு, அதிகளவு அழுத்தங்களை தரகர்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இன்னும் ஒரு சில வீடுகளே விற்காமல் உள்ளதாக அளிக்கப்படும் விளம்பரங்களால் மக்கள் பெரிய அவதியடைவதாக கூறப்படுகிறது. மிகச்சிறிய இடத்துக்கு இவ்வளவு வாடகையா என்று பலரும் புலம்பியும் வரும் நிலையில் மற்றொரு பக்கம் சொந்த வீடு வாங்க பலரும் நிர்பந்திக்கின்றனர் என்று சிலர் இணையதளங்களில் புலம்பி வருகின்றனர். ஒரு வீடு வாங்கினால் 20 ஆண்டுகள் லோன் தேவைப்படும் என்பதும் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி வருகிறது. வாய்ப்பை தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. முதல் நிலை நகரங்களில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் கட்ட கட்டுமான நிறுவனங்கள் 1.8 முதல் 2.2 கோடி ரூபாய் வரை கேட்கின்றனர். 3மற்றும் 4 ஆம் நிலை நகரங்களிலும் கட்டுமானத்துக்கு 1.3 கோடி ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டை வாங்கினால் கட்டுமான நிறுவனங்கள் தேவையில்லாமல் அவசரப்படுத்துவதாகவும், பணம் கொடுத்து பலமுறை நடக்க வைத்துவிட்டு பின்னர்தான் வீடுகள் கைக்கு கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட வீட்டை இதே நபர் தனது நண்பருக்கு 10லட்சம் ரூபாய் கம்மியாக விற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. ஹைப் ஏற்றுவதை நம்ப வேண்டாம் என்றும், பணம் கட்டிய பிறகும் கட்டுமானத்தை தாமதப்படுத்துவதாகவும் பரவலாக புகார் எழுந்துள்ளது. விற்காத வீடுகள் ஏற்கனவே 80 விழுக்காடு வரை விற்றுத்தீர்ந்துவிட்டதாக கட்டுமான நிறுவனங்கள் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் பறந்து வருகின்றன. 2 கோடி ரூபாய்க்கு பணம் கட்டிய பிறகும் தனக்கு வீடுகள் தாமதமாவதாக சிலர் வீடுகளை வாங்கும் திட்டத்தையே கைவிட்டுவிட்டு நிம்மதியாக இருப்பதாகவும் கமென்ட் செய்து வருகின்றனர்.