300 சிசி இ-பைக்குகளை உருவாக்கும் ஏதெர்..

தற்போது வரை இந்தியாவில் மிக குறைந்த தூரம் இயங்கக்கூடிய இ-பைக்குகளை ஏத்தர் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், 125 முதல் 300 சிசி திறன் கொண்ட பைக்குகளை அந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.இந்த நிலையில் திறனை அதிகரிக்கும் முடிவை ஏதெர் நிறுவனம் செய்துள்ளதால் ஓலா நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது. புதிய அதிக திறன் கொண்ட இ- பைக்குகளில் லித்தியம் பாஸ்பேட் என்ற வகை பேட்டரிகளை பயன்படுத்த இருப்பதாகவும், அவ்வாறு செய்தால் உற்பத்தி செலவு மேலும் குறையும் என்றும் ஏதெர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா தெரிவித்துள்ளார். ஒருலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகத்தான் தங்கள் நிறுவன பைக்குகள் இருக்கும் என்ற அவர், விநியோகத்தில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக கூறிய அவர், நாடு முழுவதும் 100 நகரங்களில் தங்கள் போட்டியாளர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஏதெர் நிறுவன ஷோரூம்கள் இருக்க வேண்டும் என்று கூறிய மேத்தா, மற்ற நிறுவனங்களைப்போல தங்கள் நிறுவனம் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த ஊக்கத்தொகை இல்லாமலும் தங்களால் தாக்கு பிடிக்க முடிவதாகவும் குறிப்பிட்டார். 321 ரூபாய் என்ற விலையில் அறிமுகமான ஏதெர் எனர்ஜியின் ஆரம்ப பங்குகள், 1.4மடங்கு மட்டுமே வாங்கப்பட்டன. 333ரூபாய் என்ற உச்சத்தை எட்டிய இந்த நிறுவன பங்குகள் ஒருகட்டத்தில் 299 ரூபாயாக விற்கப்பட்டது. ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மதிப்பு 11,174 கோடி ரூபாயாக சரிந்தது. ஐபிஓ வெளியிடும்போது அந்நிறுவனத்தின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.