புளூஸ்மார்ட்டை வாங்கும் பிபி வென்சர்ஸ்..

மின்சார கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வரும் புளூஸ்மார்ட் நிறுவனத்தில் அதன் புரமோட்டர்களில் ஒருவராக இருக்கும் அன்மோல் சிங் ஜக்கி என்பவரின் பங்குகளை முழுமையாக வாங்க பிபிவென்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜக்கியின் பங்குகளை மட்டும் சரிபார்த்து, பணத்தை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜக்கி குடும்பத்தில் இருந்து பங்குகளை வேறு பெயருக்கு மாற்றுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அன்மோல் மற்றும் புனீத் ஜக்கி என்ற இருவரால் தொடங்கப்பட்டது புளூஸ்மார்ட் நிறுவ னம். இந்த சூழலில் அன்மோலின் பங்குகளை முழுமையாக வாங்க பி.பி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 13.1% புளூஸ்மார்ட்டில் முதலீடு பி.பி. நிறுவனம், அன்மோலின் 19.51% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் புளூஸ்மார்ட் நிறுவனம் எந்த பரிவர்த்தனைகளும் பங்குச்சந்தைகளில் செய்யக்கூடாது என்று செபி கடந்த மாதம் 15 ஆம் தேதி எச்சரித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதியே டெல்லி, மும்பை, பெங்களூருவில் சேவைகளை அந்நிறுவனம் நிறுத்தியது. இந்த நிலையில் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பகுப்பாய்வு நடத்த ராஜூ மற்றும் பிரசாத் ஆகிய இரண்டு பட்டயக் கணக்கர்களை செபி நியமித்திருந்தது. இந்த குழு கடந்த 2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான கணக்குகளை ஆராயும் என்றும் செபி அறிவித்துள்ளது. மேலும் இந்த குழு 6 மாதங்களில் தங்கள் அறிக்கையை சமர்பிக்கும் என்றும் செபி கூறியுள்ளது.