எச்சரிக்கிறார் நாகேஸ்வரன்..

மூத்த பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரன், ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார். அதில் உலகளவில் பெரிய நிலையற்ற தன்மை நிலவும் சூழலில், அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் அது சமநிலையை பாதிக்கும் என்றும், சமநிலையை நிலைநாட்டி வளர்ச்சியை உறுதிசெய்யவேண்டும் என்றும் அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார். நிதி மற்றும் நிதியில்லாத நிறுவனங்கள் இடையே சரியான பிரிவு வேண்டும் என்றார். நிதி அல்லாத துறைகளில் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டால் அவை வாடிக்கையாளர்கள் நலன் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும் போட்டி மற்றும் சந்தையில் உள்ள சக்திகள்தான் கட்டுப்பாடுகளை விதிப்போரின் பணியை நிர்ணயிப்பதாகவும் நாகேஸ்வரன் கூறியுள்ளார். சுய திட்டமிடுதல் முக்கியம் என்றும் குறிப்பிடும் முன்னணி பத்திரிகைகள், ஏதேனும் தவறுகள் தங்கள் வணிகத்தில் நடக்கிறதா என்று தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையி் ரிசர்வ் வங்கியும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் என்று கூறியிருந்தது. வங்கிகள், வங்கிகள் அல்லாத பிற நிறுவனங்களும் சுய கட்டுப்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. பங்குச்சந்தையிலும் சுய ஒழுக்கம் தேவை என்று செபியும் கூறியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் வரும்போது போட்டிதான் கட்டுப்பாட்டை தீர்மானிப்பதாகவும், சந்தை இடமும் அதனை உறுதி செய்வதாகவும் கூறினார். அதே நேரம் நிதித்துறையில் இந்த கட்டுப்பாடுகள் அளவானதாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டும் என்றும் நாகேஸ்வரன் கூறியுள்ளார்.