மீண்டு எழந்த சீன சந்தைகள்..

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீன பங்குச்சந்தைகள் மீண்டெழ தொடங்கியுள்ளன. தேசிய அளவிலான நிதி ஒதுக்கீடு சீன பங்குச்சந்தைகளை மீள வைத்துள்ளது. சீன அரசின் இந்த முடிவால் ஹாங் செங் சீனா நிறுவனத்தின் குறியீடு 3.5%விலை உயர்ந்துள்ளது. அண்மையில் சீன பங்குச்சந்தைகள் 7.1 %விலை சரிந்து காணப்பட்டது. அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப்போரில் அமெரிக்க சந்தையை மட்டுமின்றி பல நாடுகளின் சந்தைகளையும் டிரம்ப் தனது ஆளுமையால் ஆட்டிவைத்துள்ளார். சீனாவில் அரசுக்கு சொந்தமான 8 முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து சீனா சாவரின் வெல்த் ஃபன்ட் என்ற நிதியை ஒதுக்கியுள்ளன. அமெரிக்காவின் தாக்கத்தால் சரிந்த சீன பங்குச்சந்தைக்கு இந்த அமைப்பு 42 பில்லியன் யுவான் நிதி ஒதுக்கப்பட்டது. பரஸ்பர வரி விதிப்பை ஏற்காவிட்டால் வரியை மேலும் 50 விழுக்காடு உயர்த்தப்போவதாக டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் கடைசி வரை போராடுவேன் என்று சீனாவும் சொல்லிவிட்டது. முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ஹூய்ஜின் முதலீட்டு நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு மத்திய வங்கியும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி சீனாவுக்கு எப்போதெல்லாம் நிதி தேவையோ அப்போதெல்லாம் மத்திய வங்கி ஒத்துழைப்புதரும்.