ஆயுள் காப்பீடு: நாக்பூரை சேர்ந்த ரஞ்சித் செய்த தவறு என்ன

ஆயுள் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அடிப்படையான தேவையாக இன்று மாறி இருக்கிறது. காப்பீடு எடுத்த ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தார் எந்தவித நிதி சிக்கலிலும் சிக்காமல் இருக்க ஆயுள் காப்பீடு மிகவும் அவசியமாக உள்ளது. ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரை சார்ந்தவர்களை நிதி சார்ந்து காப்பாற்ற, ஆயுள் காப்பீடு ஒன்றே விலை குறைவான உபாயமாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டை ஒருவர் எவ்வளவு குறைந்த வயதில் எடுக்கிறாரோ, அந்த அளவிற்கு பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். காப்பீட்டு பாலிசி எடுக்கும் ஒரு நபர் சரியான தரவுகளை வழங்கி இருந்தால், ஆயுள் காப்பீட்டு மூலமாக அவரின் இறப்பிற்குப் பிறகு காப்பீட்டுத் தொகை அவரை சார்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதில் ஒருவரின் வருமானம், உடல் நலன் சார்ந்த தரவுகள் மற்றும் குடும்பத்தாரின் தரவுகளை சரியாக வழங்குவது மிக முக்கியம் . காப்பீடு செய்தவர் இறக்கும் பட்சத்தில், இந்த தரவுகள் சரியாக இருந்தால் மட்டுமே காப்பீட்டு தொகையை பெற முடியும்.
உதாரணத்திற்கு, நாக்பூரை சேர்ந்த ரஞ்சித், ஒரு தொழிலை நடத்தி வருகிறார். அவருடைய வயது 28. அவர் ஆண்டுக்கு 27 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு பிரீமியம் செலுத்துகிறார். அவர் மிகக் குறைந்த வயதிலேயே ஆயுள் காப்பீடு எடுத்ததால், அவர் குறைந்த பிரீமியம் தொகை செலுத்துகிறார். ஆனால் ரஞ்சித் செய்த தவறு என்னவென்றால், காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட வேண்டிய தரவுகளை மாற்றிக் கொடுத்தது தான்.
ரஞ்சித் தனது குடும்பத்தார் தரவுகளை சரியாக கொடுத்திருந்தாலும், தன்னுடைய வருமானம் தொடர்பாக சரியான தகவல்களை காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கவில்லை. மாறாக அவர் பொய்யான வருமான சான்றிதழை சமர்ப்பித்து இருந்தார். காப்பீடு எடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா காரணமாக ரஞ்சித் உயிரிழந்து விட்டார். இப்படியான ஒரு கஷ்டமான தருணத்தில், அவருடைய குடும்பத்தார் காப்பீட்டுத் தொகையைப் பெற, காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய போது, காப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ரஞ்சித் போலியான வருமான சான்றிதழை வழங்கி இருக்கிறார் என்பதை தான். எனவே ஆயுள் காப்பீடு எடுக்கும் பொழுது சரியான தகவல்களை, காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்குவது மிக முக்கியம். இது தேவைப்படும் பொழுது எந்த சிக்கலும் இல்லாமல் காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள உங்கள் குடும்பத்தாருக்கு உதவும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்கும், அதன் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வதற்கும் +91 9150087647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://forms.gle/aQMzuv4vX9JSeiQq9.