அமெரிக்காவில் உற்பத்தியை தீவிரப்படுத்தும் சிப்ளா..

முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான சிப்ளா, மற்றும் கிளென்மார்க் மருந்து நிறுவனங்கள், தங்கள் ஆலையை அமெரிக்காவில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா அண்மையில் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்த நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து உற்பத்தி நிறுவனத்தை புதிதாக செய்ய இரு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. மூச்சுப்பிரச்சனை மற்றும் புற்றுநோய் சார்ந்த பிரிவுகளுக்கான மருந்துகள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூச்சு இழுக்கும் வகையிலான மருந்துகள், மருந்து பாக்கெட்டுகள், ஆகியவற்றை அமெரிக்காவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மன்ரோ பகுதியில் புதிய ஆலையை திறப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருவதாக கிளென்மார்க் நிறுவனத்தின் தலைவரான கிளென் சல்தானா தெரிவித்துள்ளார்., அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய டிரம்ப் அரசு செய்து வரும் பணிகளுக்கு தங்கள் நிறுவனம் சரியாக பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் நிலையான வருவாய் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக சிப்ளா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவிலேயே ஆலை இருந்தால், சந்தை தேவைக்கு ஏற்ப உடனடியாக மருந்து தயாரிக்க ஏதுவாக இருக்கும் என்றும் சிப்ளா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புவியியல் அமைப்பில் பல்வேறு இடங்களில் மருந்து நிறுவனங்கள் நடத்துவது நல்ல விஷயம் என்று சிப்ளா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உமாங்க் வோரா தெரிவித்துள்ளார். சிம்பிகார்ட், QVAR உள்ளிட்ட மருந்துகள் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் கிடைக்கும். கடந்த 24 நிதியாண்டில் மட்டும் சிப்ளா நிறுவனம், 8கோடியே 60லட்சம் மருந்துச்சீட்டுகளின் மருந்துகளை அளித்துள்ளது. 2024 நிதியாண்டில், வடக்கு அமெரிக்காவில் இயங்கி வரும் சிப்ளா நிறுவன ஆலை மட்டும் மொத்த வருவாயில் 30 விழுக்காடு பங்களிப்பை அளிக்கிறது. 2025 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில், 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 27 விழுக்காடு வருவாயை வடக்கு அமெரிக்கா கொண்டுள்ளது. பரஸ்பர வரிவிதிப்பு அறிவிப்புக்கு பிறகு ஏராளமான இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு வந்து உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அமெரிக்க உணவு பாதுகாப்பு அமைப்பான FDA தெரிவித்துள்ளது.