பணம் யார் கட்டுவது என்பதில் குழப்பம்…

உடல் எடை குறைப்புக்கான மருந்தான ஒசெம்பிக் போன்ற மருந்துகள் சந்தையில் வந்துள்ள நிலையில், இது தொடர்பான காப்பீடுகளுக்கு யார் பணம் கட்டுவது என்பதில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. ஜிஎல்பி-1எஸ் வகையைச் சேர்ந்த சில உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு பணம் தர முடியாது என்று சில நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன. இந்த நிலையில் உடல் எடை குறைப்புக்கான மருந்தை நிறுவனங்களில் வேலைசெய்வோரும் தனியாக பணம் கொடுத்து வாங்க முடியாத சூழல் காணப்படுகிறது. பல பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும் தொடங்கிவிட்டதால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகளை குறைத்து வருகின்றனர். உடல் எடை குறைப்பு மருந்துகளை உள்ளடக்கிய புதிய காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஊழியர்கள் பணி மாறுதல்கள் மேற்கொள்ளவும் தொடங்கியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ஊழியர்கள் நலனுக்காக காப்பீடுகள் அளிப்பது மிகவும் சிக்கலான ஒன்றாக கருதப்படுவதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் டைப்2 சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உடல் எடை குறைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களின் நலனுக்காக அளிப்பதில் தவறு இல்லை என்று ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றனர். மிகச்சிறந்த காப்பீட்டு வசதிகள் உள்ள நிறுவனங்களுக்கு தனது பணியாளர்கள் செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் கேட்கும் காப்பீடுகளை அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் ஜிஎல்பி1-எஸ் வகை காப்பீடுகளின் நிலையை மாற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.