இது இந்தியாவின் ஸ்டீல் யுத்தம்..

அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் அனைத்து தயாரிப்புகளுக்கும் கூடுதல் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இந்தியாவும் ஸ்டீல் உற்பத்தியில் கெடுபிடி காட்டி வருகிறது. ஸ்டீல் உற்பத்தியில் சீனா அதிக பங்களிப்பை அளித்து வரும் நிலையில், தற்காலிக வரியாக 12 விழுக்காடு வரையினை இந்திய அரசு விதிக்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பாதிக்காத வகையில்தான் தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரிய வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில் அந்நாட்டு ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. பெரியளவு தேவைப்படாதபோது, சீனாவில் உற்பத்தியாகும் ஸ்டீல்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியா தற்போது அறிவித்துள்ள கட்டணம் என்பது வெறும் 200 நாட்களுக்கு மட்டுமே என்றும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 30 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசின் இந்த அறிவிப்பால் அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் பங்குகள் 5 விழுக்காடு உயர்ந்துள்ளன. இதேபோல் டாடா ஸ்டீல் லிமிடட் நிறுவன பங்குகள் 2.9விழுக்காடு உயர்ந்துள்ளன.
ஜிண்டால் நிறுவன பங்குகளும் 2விழுக்காடுக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவின் ஸ்டீல் விற்பனை இந்தியாவில் 80 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு அறிவித்துள்ள வரி காரணமாக இந்திய ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்த வரியை விதிக்க வேண்டும் என்றும் இந்திய உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்