முன்னணி நிறுவனங்களுக்கு டபுள் பெனிஃபிட்..

டாடா மோட்டார்ஸ், மகிந்திரா, ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கம் தரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற முயற்சிகளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே மத்திய அரசின் FAME எனப்படும் மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தில் மார்ச் வரை சலுகைகளை பெற்று வருகின்றன. ஆட்டோ உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை மற்றும் FAME-2திட்டத்தை செயல்படுத்துவதால் மானியத்துடன் விற்பனை செய்யும் முறை இந்த மாத இறுதி வரை நடக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் மற்றும் கனரக அமைச்சகம் FAME-2, திட்டம் மின்சார வாகனங்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் சில கோரிக்கை எழுந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா நிறுவனத்தினர் 2024 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி முதல் 15 நாட்களுக்கான மின்சார இருசக்கர வாகன விற்பனைக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைக்கும் ஓலா நிறுவனத்துக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. 25,938 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனங்களில் முதல் முறையாக மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் இந்த சலுகையை பெற இருக்கிறது. ஆட்டோ பிஎல்ஐ என்ற திட்டத்தின் கீழ் பூஜ்ஜிய அளவு புகை வெளியேற்றம், பேட்டரி வாகனங்கள், ஹைட்ரஜன் செல் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டு முதல் ஆட்டோ பிஎல்ஐ அடுத்த 5 ஆண்டுகளில் வழங்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.