திரும்பப் பெறப்பட்ட சில தயாரிப்புகள்..

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்த நிறுவனத்துடன் லூபின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருந்துப்பொருட்கள் அமெரிக்காவில் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டன. லேபிளிங் மற்றும் உற்பத்தி சார்ந்த சில பிழைகள் இருந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஐதராபாத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் மருந்துகள் அமெரிக்க சந்தையில் விற்கப்படும்போது லேபிலில் உள்ள பிழைகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 4010 பேக் அளவு கொண்ட லெவிச்ராசெக்டம், மற்றும் சோடியம் குளோரைடு ஊசிகள் ஆயிரம் மில்லிகிராம் உள்ளிட்ட சில பொருட்கள் சந்தையில் இருந்து திருபம்பப் பெறப்பட்டன.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அறிவிப்பை அந்நிறுவனம் அமெரிக்கா முழுவதும் அறிவித்தது. தீவிர உடல்நல பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் இந்த வகை மருந்துகள் திரும்பப்பெறப்பட்டதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதேபோல் லுபின் நிறுவனம் மும்பையை அடிப்படையாக கொண்டது. மன அழுத்தத்துக்கான மருந்தை திரும்பப் பெறுகிறது. 2,724 பாட்டில்கள் முழுவதும் கிளோமி பிராமைன் ஹைட்ரோகிளோரைடு மாத்திரைகளில் தூசி இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி அந்த மருந்துகளை திரும்பப் பெறவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.