ஐபிஓ அளவை குறைத்த ஏதெர்..

உலகளவில் பரஸ்பர வரி விதிப்பு முறை சர்ச்சையாகி வரும் நிலையில், ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டின் மதிப்பை குறைத்துள்ளது. அதன்படி தொடக்கத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. இதனை தற்போது 2626 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. 1கோடியே 11லட்சம் பங்குகளை பங்குதாரர்கள் விற்கலாம் 2.2 கோடி பங்குகள் விற்க திட்டமிடப்பட்டது.
ஏதெர் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக ஹீரோ மோட்டோகாரப் நிறுவனம் திகழ்கிறது. திடீரென ஐபிஓவின் மதிப்பை குறைக்க ஏதெர் நிறுவனம் எந்த காரணத்தையும் சொல்லவில்லை, மேலும் தங்கள் பங்குகளை ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தரப்போவதில்லை என்றும் ஹீரோ நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். மகாராஷ்டிராவில் தங்கள் புதிய ஆலையை நிறுவ ஏதெர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டே மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், ஓலா, டிவிஎஸ் மோட்டார்களின் வருகையால் விற்பனையில் பின்தங்கியது.
பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏதெர் நிறுவனம் கடந்த டிசம்பரில் 776 கோடி ரூபாய் பணத்தை கடனாக வைத்திருந்தது. இது தற்போது 578 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.