ஈக்விட்டி சார்ந்த பரஸ்பர நிதிக்கு வரவேற்பு..

மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் ஈக்விட்டி சார்ந்த பரஸ்பர நிதிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பிரபல நிதி ஆய்வு நிறுவனமான மோட்டிலால் ஆஸ்வால் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பரஸ்பர நிதியில் கடந்த காலாண்டில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக கிடைத்திருப்பதாகவும். ,1லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மொத்த முதலீடுகள் வந்திருப்பதாகவும். டெப்ட் வகையிலான பங்குகளை 1லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுத்துள்ளனர். ஆக்டிவாக இருக்கும் ஈக்விட்டி நிதிகள் மட்டும் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்களிக்கின்றன. பேசிவ் எனப்படும் நிழல் நிதி 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. பேசிவ் ஈக்விட்டிகள் மட்டும் 21.5விழுக்காடு அளவுக்கு மொத்த பிரிவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக்டிவ் பிராட் அடிப்படையிலான பிரிவில் மட்டும் ஃபிளெக்சி கேப் மற்றும் சிறு முதலீட்டு பங்குகளில் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக ஃபிளக்சி கேப் நிதியாக 16ஆயிரத்து 500 கோடி ரூபாயும், சிறு முதலீட்டு பங்குகளில் 12 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி பெறப்பட்டுள்ளது. மிட்கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் 11ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு நிதி புதிதாக கிடைத்துள்ளது. பேசிவ் பிரிவில் மக்கள் பெரிய முதலீட்டு நிதிகளைத்தான் தேர்வு செய்துள்ளனர். 90 விழுக்காடு மக்கள் பெரிய நிதியில்தான் கவனம் செலுத்தியுள்ளனர். அதே நேரம் சமீப காலமாக நடுத்தர முதலீடு மற்றும் சிறு முதலீட்டு பிரிவில் அதிகம் பேர் கவனம் செலுத்தி வருகின்றனர்.