ஏதெர் எனர்ஜி IPO அப்டேட்..

வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப இருசக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஏதெர் நிறுவனம் தனது ஐபிஓ அளவை 50 மில்லியன் டாலர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அந்நிறுவனம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. உலகளவிலான பங்குச்சந்தை சூழலில் பெரிய மாற்றம் இருப்பதால் கவனத்துடன் ஆரம்ப பங்குகளை ஏதெர் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை, ஆனாலும் என்ன நடக்கிறது என்பதை சிலர் ரகசியமாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். நிலைமை சீராகும் வரை காத்திருக்காமல் திட்டமிட்டபடி ஆரம்ப பங்குகளை வெளியிடுவதிலும் ஏதெர் உறுதியாக இருக்கிறது. பங்குச்சந்தைகளில் பெரிய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் தனியார் நிறுவனத்தின் உதவியை நாடவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அண்மையில் பட்டியலிடப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது. ஓலா நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகள் வெளியிட்டபோது, ஒரு பங்கின் விலை 76 ரூபாயாக இருந்தது. இது தற்போது 33%குறைந்து 50 ரூபாய் 88 காசுகளாக சரிந்துள்ளது.