எக்சைடின் எக்சைட்டிங் முயற்சி..

வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் எக்சைடு நிறுவனம், இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்க முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு நிறுவனமாக ஹியூண்டாயும் உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளூரில் தயாரிக்கப்படும் பேட்டரிகளை தனது மின்சார வாகனத்தில் பயன்படுத்தி சாதனையை ஹியூண்டாய் நிகழ்த்த இருக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்தாண்டு டிசம்பரில் கையெழுத்தானது. அதிநவீன பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள எக்சைடு நிறுவனம், இ-ரிக்ஷா மற்றும் இன்வெர்டர்களிலும் புதிய பேட்டரிகளை பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. வீடுகள் மீது பொருத்தப்படும் சூரிய தகடுகளில் இருந்து பெறப்படும் ஆற்றல் மூலம் நல்ல லாபம் பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டுக்குள் வீடுகளின் கூரைகளுக்கு மேல் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு 40 ஜிகாவாட்டாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. வாகனங்களுக்கான பேட்டரி தேவை, கிடங்குகள் தரவு மையங்கள், போக்குவரத்து மற்றும் கிடங்குகள், டெலிகாம், ஆற்றல் மற்றும் கிராமபுற கட்டமைப்புகளில் தங்கள் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது.