ஃபெடரல் வங்கி கியூ 4 அப்டேட்..

ஃபெடரல் வங்கியின் நான்காவது காலாண்டு லாபம் 12.37விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் அந்த வங்கியின் நிகர லாபம் ஆயிரத்து 91 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 8 விழுக்காடு உயர்ந்து 2,377 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2195 கோடி ரூபாயாக இருந்தது. வட்டியில்லாத வருவாய் 33 விழுக்காடு உயர்ந்து ஆயிரத்து 6 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த வருவாய் இதுவரை இல்லாத அதிகபட்ச வருவாயாகும். நிகர வட்டி மார்ஜின் தொகை 3.12 விழுக்காடாக இருந்தது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 3.21விழுக்காடாக இருந்தது. ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் ரெபோ வட்டி விகிதத்தை குறைக்கின்றதோ அப்போதெல்லாம் டெபாசிட் அதிகரிப்பதாக அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.வி.எஸ் மணியன் கூறினார். 2025 நிதியாண்டின் கடன் அளிக்கும் விகிதம் 13 விழுக்காடு உயர்ந்துள்ளதாக கூறிய மணியன், கிரிடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்கள் அதிகளவில் வழங்கப்படுகிறது என்றார். நிர்வாக செலவுகள் 8 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. அந்த வங்கியின் வாராக்கடன், 1.84 விழுக்காடாக குறைந்துள்ளது. முன்னதாக இந்த விகிதம் 1.94விழுக்காடாக இருந்தது.