4,000டாலர்களை கடக்கும் தங்கம் விலை..

உலகளவில் பிரபல தரகு நிறுவனமாக இருக்கும் ஜே.பி. மார்கன் நிறுவனம், தங்கம் விலை 2026 இரண்டாவது காலாண்டில் ஒரு அவுன்ஸ் 4 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டும் என்று கணித்துள்ளது. உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார சமநிலையற்ற சூழல்காரணமாக இந்த விலை மாற்றம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு முறையால் ஏற்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் தனிநபர்கள், முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள் என அனைத்து தரப்பினரும் 710 டன் அளவுக்கு இந்தாண்டு வாங்குவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளின் மத்திய வங்கிகள்தான் 2025-ல் 900 டன் அளவுக்கு தங்கம் வாங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதாரம், வணிகம், உலகளாவிய கூட்டமைப்புகளில் மாற்றம் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தங்கத்தை வாங்கும் விகிதமும் அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு பாதிக்கு மேல்தான் 4ஆயிரம் டாலர்களை தங்கம் விலை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கத்தில் சீரான முதலீடுகள் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.