வேலைவாய்ப்பு குறைய வாய்ப்பு – சுந்தர் பிச்சை

பணியமர்த்தல் மற்றும் முதலீடுகளின் வேகத்தை கூகுள் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ள கூகுள், பொருளாதார நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில் பணத்தை எங்கு செலவிடுகிறது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
” ஆண்டு முழுவதும் பணியமர்த்தும் வேகத்தை நாங்கள் குறைப்போம்” என்று தனது மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதுவரை கூகுளின் ஆல்பாபெட் பங்குகள் 21% குறைந்துள்ளன. முதல் காலாண்டில் வளர்ச்சியானது ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டை விட 23% ஆக குறைந்தது. 2021 இன் முதல் மூன்று மாதங்களில் 34% குறைந்தது.