ஹல்திராமை வாங்க போட்டா போட்டி..

இந்தியாவின் பிரபல ஸ்நாக்ஸ் நிறுவனமாக திகழும் ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆல்ஃபா வேவ் கிளோபல், டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹல்திராமை வாங்க ஒப்பந்த பத்திரங்களை அளித்துள்ளன. இந்த டீல்தான் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஈக்விட்டி டீலாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பிளாக்ஸ்டோன், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிஐசி, ADIA ஆகிய நிறுவனங்கள் ஹல்திராமின் 15 முதல் 20 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளன. இதேபோல் பியான் கேபிடல் , டெமாசெக் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளது. இதேபோல் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் ஆர்வம் காட்டி வருகின்றது. 75முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த ஏலம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 87 ஆண்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஹல்திராம், முதலில் வெவ்வேறு நிறுவனங்களில் பேச்சவார்த்தை நடத்திப்பார்த்தன. ஆனால் தற்போது வரை 11,250 கோடி ரூபாய் முதல் 18,750 கோடி ரூபாய் வரை இந்த டீல் முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த இரு பிரிவுகளாக இயங்கும் ஹல்திராம் நிறுவனங்களும் சேர்ந்து 12,800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.இதில் வரியெல்லாம் போக லாபம் மட்டுமே 1350-1400 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஹல்திராம் நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ள பங்குகளை விற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொது பட்டியலிடும் பணிகள் அடுத்த 12 முதல் 24 மாத்ங்களுக்குள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் டி ஏ அசோசியேட்ஸ் மற்றும் தற்போது ஆர்வம் காட்டும் நிறுவனங்களும், கெலாக்ஸ், பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களும் ஹல்திராமை வாங்க போராடி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனமும் 10 பில்லியன் டாலர் வரை தரமுடியாது என்பதால் டீலை பாதியில் நிறுத்தினர்.