டீலர்களை அதிகரிக்கும் கார் நிறுவனங்கள்..

இந்தியாவில் கார் விற்பனை பெரியளவில் ஜொலிக்காத இந்த தருணத்தில், டீலர்களின் எண்ணிக்கையை கார் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. கார் ஷோரூம்களை அதிகரித்தால் விற்பனையும் அதிகரிக்கும் என்பதே கார் தயாரிப்பாளர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது. 2024-25 காலகட்டத்தில் மாருதி சுசுகி, ஹியூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை பெரியளவில் சரிந்தது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, டொயோடா, கியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே விற்பனையை அதிகரித்துள்ளன. மாருதி சுசுகியும் -மஹிந்திரா அன்ட் மஹிந்திராவும் , கியா நிறுவனமும் 1 முதல் 4 விழுக்காடு வரை டீலர்ஷிப் உயர்த்தியுள்ளன. டாடா மோட்டார்ஸ், டொயோடா ஆகிய நிறுவனங்கள் டீலர்களை அதிகரிக்கும் விகிதத்தை 25 முதல் 27 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளன. ஸ்கோடா நிறுவனம் அடுத்தாண்டில் இருந்து ஆண்டுக்கு லட்சம் கார்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 350 ஷோரூம்களை திறக்கவும் முடிவெடுத்துள்ளது. பழைய கார்கள் அதிகம் இருப்பதால் இன்னும் நிலைமை சிக்கலாகி வருவதாக டீலர்கள் புலம்பி வருகின்றனர். மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் டீலர்கள் தெரிவிக்கின்றனர்.