100 கோடி இந்தியர்களால் இது முடியாதாம்…

இந்தியர்களில் 90 விழுக்காடு பேர் பணத்தை தங்கள் விருப்ப்படி செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
புளூம் வென்சர்ஸ் என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை இண்டஸ் வேலி ஆண்டறிக்கை என்ற பெயரில்வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டாப் 10% மக்கள் மட்டுமே இந்திய பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிப்பதாக கூறப்பட்டுள்ளது. பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக உயர்வதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பொருட்களை வாங்க விரும்பும் மக்கள் 30 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது. வீடுகள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவோரின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட்துறையில் முதலீடு செய்ய விரும்புவோரின் விகிதம் 40 விழுக்காடாக இருந்ததாகவும், இது தற்போது 18%ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற விகிதத்திலேயே அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இருப்பதாக கூறப்படுகிறது. நடுத்தர மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகவும் கூறப்படுகிறது. 92 விழுக்காடு வரி செலுத்துவோர் தேவையில்லாத வரி செலுத்த மாட்டார்கள். 1990-ல் 34% ஆக இருந்த டாப் 10% மக்களின் விகிதம் தற்போது 57.7%ஆக உயர்ந்துள்ளது. தேசிய வருவாயில் இரண்டாவது பாதியில் இருப்பவர்கள் எண்ணிக்கை 15-ல் இருந்து 22%ஆக குறைந்துள்ளது., இந்தியாவில் பொருட்களை வாங்குவோரின் விகிதம் சீனாவை விட மிகவும் பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, ஒரு இந்தியர் சராசரியாக 1493 அமெரிக்க டாலர்களை செலவிட்டு பொருட்களை வாங்குகிறார். ஆனால் சீனாவில் 2010 ஆம் ஆண்டே இந்த செலவிடும் விகிதம் 1597 அமெரிக்க டாலர்களாக இருந்ததாகவும் மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.,