முடிவுக்கு வந்த 7 நாட்கள் ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களாக ஏற்பட்ட உயர்வு வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 315புள்ளிகள் குறைந்து79ஆயிரத்து 801 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் குறைந்து, 24 ஆயிரத்து 246 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தது. IndusInd Bank, UltraTech Cement, Grasim Industries, Tata Motors, Dr Reddy’s Labsஉள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. HUL, Bharti Airtel, Eicher Motors, ICICI Bank, Eternal உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவில் முடிந்தன. JK Cement, GlaxoSmithKline Pharmaceuticals, UltraTech Cement, UPL, Navin Fluorine, SBI Cards, Bajaj Finserv, Bajaj Finance, Laurus Labs, AstraZeneca Pharma உள்ளிட்ட 70 நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்தன. வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து5 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 40 ரூபாயாக இருந்தது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்