சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை பெரிய சரிவில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411புள்ளிகள் குறைந்து, 80ஆயிரத்து335 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 274 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக இந்திய சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. கடைசி நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் முடிவெடுத்ததால் பெரியளவு பாதிப்பு ஏற்பட்டது. HCL Technologies, Kotak Mahindra Bank, Titan Company, Axis Bank, Coal Indiaஉள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Shriram Finance, Eternal, M&M, Tata Consumer, Adani Enterprisesநிறுவன பங்குகள் பெரியளவில் சரிவை கண்டன. ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்ட நிலையில் மற்ற நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் விலை உயர்ந்து. ஒரு சவரன் தங்கம் 73 ஆயிரத்து 40 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 130 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 110 ரூபாயாகவும், கட்டிவெள்ளி விலை கிலோ 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்துடன் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.