பிரியாணி தான் கிங்..

இந்தியாவின் பொதுவான உணவு என்று எதையும் குறிப்பிட முடியாத நிலையில், ஸ்விகியில் 2024-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்து புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பிரியாணிக்குத்தான் முதலிடத்தை மக்கள் அளித்துள்ளனர். ஸ்விகியில் ஒரு நிமிடத்துக்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நொடிக்கு 2 பிரியாணி.. இந்தாண்டில் மட்டும் 8 கோடி பிரியாணி ஆர்டர்கள் ஸ்விகியில் செய்யப்பட்டுள்ளன தோசைக்குத்தான் இந்த பட்டியலில் 2 ஆவது இடம் கிடைத்துள்ளது. இதேபோல், ரசமலாய்,சித்தாபல் ஐஸ்கிரீம் ஆகியவை அடுத்தடுத்த வரவேற்பை பெற்றவையாக உள்ளன. 21கோடியே 50லட்சம் பேர் இரவு உணவைத்தான் ஸ்விகியில் அதிகம் பேர் ஆர்டர் செய்கின்றனர். மதிய உணவை விட 29விழுக்காடு பேர் அதிகமாக இரவு உணவுகளைத் தான் ஆர்டர் செய்வதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. ஷிலாங்கில் நூடுல்ஸையும், டெல்லி மக்கள் படுரேவையும், சண்டிகர் மக்கள் ஆலு பரந்தாவையும், கொல்கத்தா மக்கள் கச்சோரிகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த நபர் ஒரே நேரத்தில் 250 வெங்காய பீசாக்களை ஆர்டர் செய்ததும். டெலிவரி செய்த கிலோமீட்டர்கள் 196 கோடி கிலோமீட்டர் தூரம் என்றும் வியக்க வைக்கிறது. கோவையைச் சேர்ந்த காலீஸ்வரிஎன்பவர் 6,658 ஆர்டர்களையும் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த நபர் ஒரே முறையில் 3லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளது சாதனையாக உள்ளது.ஸ்விகியில் மதுவகைகளை ஆர்டர் செய்வதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. 2024-ல் மட்டும் 2.89லட்சம் பேர் ஸ்விகியில் மதுவகைகளை ஆர்டர் செய்துள்ளனர்.