ஜனவரியில் குறைந்த இந்திய பொருளாதாரம்.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியில் பெரியளவில் சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 16 குறியீடுகளின் அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பிரிவில் இந்திய பொருளாதாரம் பெரிய சரிவை கண்டுள்ளதாகவும், குறிப்பாக பயணிகள் வாகனம் விற்பனை பிரிவில் இந்தியாவில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளதாக அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. இறக்குமதி, கரன்சி, வணிக சமநிலை உள்ளிட்ட துறைகள் பெரிய சரிவை கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. சில்லறை மற்றும் முக்கியமான பணவீக்கம் கிராமபுறங்களில் அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும், தொழிலாளர்கள் பங்களிப்பு அதிகம் இருப்பதால் அனைத்து துறைகளும் சாதகமாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உள்ள 16 குறியீடுகளை வைத்து தனியார் நிறுவனம் ஒப்பீட்டை செய்து வருகிறது. இதில் கடந்த டிசம்பரை விட ஜனவரியில் நிலைமை சற்று மோசம் என்று கூறியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் இந்த புள்ளிவிவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்