இண்டஸ் இன்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சொன்னது என்ன?

மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இண்டஸ் இன்ட் வங்கிக்கு அறிவுறுத்தல் ஒன்றை செய்திருக்கிறது. அதில், தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய பதவிகளுக்கு வெளியில் இருந்து தலா ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வங்கியின் சுமந்த் கத்பாலியாவுக்கு மேலும் ஓராண்டு சிஇஓ பதவி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. அவரின் பதவிக்காலம் வரும் மார்ச் 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது அது மார்ச் 23,2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கத்பாலியாவுக்கு தொடக்கத்தில் 3 ஆண்டுகள் பதவி வழங்க இன்டஸ் இன்ட் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி, அவரின் பதவிக்காலத்தை குறைத்தது. தனது பதவிக்காலத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கிக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று தமக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள கத்பாலியா, இது இண்டஸ் இன்ட் வங்கியின் சோதனை காலம் என்றும், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு வெளியில் இருந்து ஒரு நபரை இயக்குநர்கள் குழு தேடட்டும் என்றும் கூறினார். மார்ச் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் ஆயிரத்து600 கோடி ரூபாய் இழப்பை அந்த வங்கி சந்தித்தது. குறைவான பணப்புழக்கம், 3 -6 ஆண்டுகள் பழமையான யென். மற்றும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய டாலர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உள்ளுக்குள்ளேயே பணத்தை கடனாக வாங்கியது தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்படுகிறது.