இன்டஸ்இண்ட் வங்கி அப்டேட்..

வங்கிக்கு உள்ளேயே முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள இன்டஸ் இண்ட்வங்கி குறு நிதி வணிகத்தில் தனது சுதந்திரமான தணிக்கையில் EYக்கு தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. அந்த வங்கியில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் EY நிறுவனத்தை தணிக்கை செய்ய இன்டஸ் இண்ட் வங்கி அழைத்ததாக சில இதழ்களில் செய்திகள்வெளியாகின. இதனை இன்டஸ் இண்ட் வங்கி மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் உள் தணிக்கைக்காக மட்டுமே சில நிறுவனங்களை அழைத்ததாகவும், மொத்த முறைகேடு புகாரை விசாரிக்க EY அழைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் வரையிலான 3 ஆவது காலாண்டில் அந்த வங்கியின் குறுநிதி பிரிவில் 32,564 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரியவந்தது. இது வங்கியின் மொத்த தொகையில் 9%ஆகும். விளக்கத்தை இன்டஸ்இண்ட் வங்கி வெளியிட்டதும் அந்த வங்கியின் பங்குகள் 5 விழுக்காடு வரை சரிந்து 787 ரூபாயாக குறைந்தது. pwc என்ற நிறுவனம் இன்டஸ் இண்ட் வங்கியின் முறைகேடுகளை உறுதி செய்தது. மேலும் கடந்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 1,979 கோடி ரூபாய் மதிப்பு அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தது. அண்மையில் வங்கியில் உள்ள கணக்கு சிக்கல் முறைகேடு புகார்களை விசாரிக்க கிரான்ட் திராண்டன் என்ற நிறுவனத்தை நாடியிருப்பதாக இன்டஸ் இண்ட் வங்கி அறிவித்திருந்தது. தற்போதைய சிஇஓவுக்கு மேலும் ஓராண்டு பணிநீட்டிப்பு செய்ய அண்மையில் ரிசர்வ் வங்கி அனுமதியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.