இன்டஸ்இண்ட் வங்கியில் நடப்பது என்ன..

இன்டஸ் இண்ட் வங்கியில் முறைகேடு நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் செபி அமைப்பு குறிப்பிட்ட வங்கியில் ஆய்வு நடத்திய நிலையில் உள் வணிகம் எதுவும் நடந்ததாகதெரியவில்லை என்று கூறப்படுகிறது. முறைகேடு புகார்கள் குறித்து செபி நடத்திய விசாரணையில் எதுவும் தவறாக கண்டறியப்படவில்லை.என்று கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் அடுத்தடுத்த நாட்களில் சிஇஓவாக இருந்த சுமந்த் மற்றும் துணை சிஇஓ அருண் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1960 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக கடந்த மார்ச் மாதத்தில் இந்த வங்கியின் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கிரான்ட் தார்ன்டன் நிறுவனமும் தணிக்கை செய்து வருகிறது. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அதற்கு உண்டான ஆதாரங்கள் முக்கியமாகும். அது எதுவும் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செபி, ரிசர்வ் வங்கி மற்றும் இன்டஸ்இண்ட் வங்கி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மே 2023 முதல் ஜூன் 2024 வரை சிஇஓவாக இருந்து கத்பாலியா 9.5லட்சம் பங்குகளை 134 கோடிரூபாய்க்கு விற்றதாகவும், துணை சிஇஓவாக இருந்த குரானா 5லட்சத்து 50 ஆயிரம் பங்குகளை விற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை மாற்றுவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக இன்டஸ்இண்ட் வங்கியின் மீது புகார்கள் எழுந்துள்ளன. குரானாவுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தெரிந்திருந்தும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அதனாலேயே 1959 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.